• May 08 2024

தற்கொலை செய்வதற்கு முன் சில்க் ஸ்மிதா தனது கைபட எழுதிய கடிதத்தை பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் தனது காந்த கண்ணழகு, வசீகரமான முகம், தனக்கென ஒரு ஸ்டைல் என்பவற்றின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் கவர்ந்தார்.

1979ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் 1996ம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவ்வாறு புகழில் உச்சத்தில் இருக்கும் போது தனது 35வது வயதில் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது இறப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும். இப்போதும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பலரும் சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன் சில்க் ஸ்மிதா தனது கைபட தெலுங்கில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதமே தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதாவது நடிகையாக மிகவும் கஷ்டப்பட்டேன், என்னை யாரும் நேசிக்கவில்லை, என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளது, ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை.

5 வருடங்களாக ஓருவர் எனக்கு வாழ்வு தருவதாக கூறினார், ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான், நான் களைத்துப் போனேன். இந்த கடிதம் எழுத கூட மிகவும் சிரமப்பட்டேன் என முழுவதும் சோகமான விஷயங்களை கூறியிருக்கிறார்.இந்தக் கடிதத்தை ரசிகர்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
  2. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement