• Jan 15 2025

கதையை ஊகிக்க முடியாத ட்ரைலர் எதிர்பார்ப்பை கூட்டும் "கொட்டுக்காளி"

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

சிவகார்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "கொட்டுக்காளி" நடிகர் சூரியின் திரைவாழ்வில் அடுத்த பரிமாணத்தை வழங்க வல்லதாக பேசப்படுகிறது.


மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகையான அன்னா பென்னின் தமிழ் அறிமுகமான இப் படம் அவருக்கு பெரு வாய்ப்பாக அமைத்தது என்பதை சமீபத்தைய நேர்காணல்களில் குறிப்பிட்டார் அன்னா பென்.திரைக்கு வரும் முன்னர் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றுள்ளது "கொட்டுக்காளி" திரைப்படம்.

soori and anna ben starrer Kottukkaali ...

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சூரியின் அன்பு தப்பி சிவகார்த்திகேயன் "கொட்டுக்காளி" படத்தின் ட்ரைலரினை வெளியிட்டு வைத்துள்ளார்.கதையை ஊகிக்க முடியாத இந்த ட்ரைலர் 02 நிமிடம் 08 செக்கன் நீளத்தை கொண்டுள்ளது.

Kottukkaali streaming: where to watch ...

ஒற்றை வார்த்தை கூட பேசாதிருக்கும் அன்னா பென்னை பேய் பிடித்துள்ளதாக எண்ணி சாமியாரிடம் அழைத்து செல்லும் சிறு காட்சி மட்டும் ட்ரைலரின் தொடர்ச்சியாய் இருக்க பார்வையாளர்களால் படத்தின் கதையை ஊகிக்க முடியாதுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 


Advertisement

Advertisement