அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் ஆச்சரியமாக இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் அஜித் இருக்கும் நிலையில் அஜித் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை ‘குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’படத்தில் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்திருப்பதாகவும் அவர்கள் நட்டி நடராஜன் மற்றும் சுனில் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்த சுனில் அடுத்ததாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது நட்டி நடராஜன் மற்றும் சுனில் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருவதாகவும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
Listen News!