• Jan 19 2025

அண்ணா அண்ணா என்று சூழ்ந்த ரசிகர் படை... காவல் நிலையத்தில் கடைசி நாள் TTF வாசன் செய்த நெகிழ்ச்சி செயல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்பவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு பல சாகசங்கள் செய்வதோடு அதனை வீடியோவாக பதிவிட்டு இளைஞர்கள் அதுவும் 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.

இந்த நிலையில், Twin throttlers என்ற யூடியூப்  பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதாக அடிக்கடி பொலிஸ் சிக்குவதோடு, அண்மையில் தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்ற போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார்.எனினும், 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்த்தப்பியுள்ளார். இதையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.


40 நாட்கள் சிறையிலிருந்து ஒருவழியாக வெளிய வந்த  TTF வாசன், 'என்னுடைய வாழ்க்கையே பைக்தான். நான் என்னுடைய பேஷனைத்தான் தொழிலாகவே மாற்றி இருக்கிறேன். அதற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறேன். இந்த விஷயத்திற்காக எனக்கு 10 வருடம் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பு 'என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல் இருக்கிறது' என அவர் வருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளார். இதன் பிறகு ஒவ்வொரு முறையும்  காவல் நிலையத்தில் கடைசி நாள் TTF வாசன் கையொப்பமிட வந்த வேலையில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.  

Advertisement

Advertisement