தமிழை பயன்படுத்தும் போதுள்ள சுயாதீன முறைதான் தமிழர்களுக்கு தமிழ் கொடுத்த ஒரு பெரும் கொடையென்றே சொல்லலாம்.அதேபோல் தமிழ் திரையுலகில் மாறாத ஒரு பாரம்பரியம் தான் திரையிசை பாடல்கள். கவித்துவத்தில் இருந்து கானா வரை தமிழ் பாடல்களின் தாக்கம் ஒவ்வொரு மக்களுக்கும் எப்போதும் மாறாதது.
திரையிசை பாடல்களுக்கு முதல் உயிராய் இசையிருக்க அடுத்து காற்றோடு கலந்த வாசனையாய் உடன் வருவது தான் பாடல் வரிகள்.காலத்திற்கு காலம் எத்தனையோ கவிஞர்கள் வந்து போனாலும் சில பாடல்களையும் அதை ஆக்கியோரையும் தமிழ் நெஞ்சங்கள் மறந்ததாய் இல்லை.அப்படியோர் வித்தகர் தான் கவிஞர் வாலி.
தமிழ் சினிமாவில் நான்கு தலைமுறைகளை கண்ட கவிஞர் வாலி அவர்கள் தமிழ் ரசிகர்களால் வாலிபக் கவிஞன் என அழைக்கப்படுகிறார்.கிட்ட தட்ட 15000 பாடல்களை எழுகியுள்ள வாலி அவர்கள் அன்று எம்.ஜி.ஆர் தொடங்கி இன்று சிவகார்த்திகேயன் வரை அனைத்து ஹீரோக்களிற்கும் பாடல்களை எழுதியுள்ளார்.
இவ் வாலிபக் கவிஞனின் 81 வது ஜனன தினம் இன்றாகும்,கடந்த 2013 இல் நம்மையெல்லாம் விட்டு இறையடி சேர்ந்த கவிஞனின் வரிகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் கடந்து செல்லும் பொழுதுகளில் அவரது நினைப்பை விதைத்து அவரின் நிலைப்பை உறுதி செய்கின்றன.இன்றைய நாளில் அவரது பிறந்தநாளை ஒட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!