• Apr 15 2026

வசமாக சிக்கிய சரவணன்.. வீடியோ ஆதாரத்தை காட்டி மிரள வைத்த பாக்கியம்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி கதிரைப் பார்த்து நாம மாமாவுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கணும் எல்லோ, லோன் கேட்கலாமா என்று கேட்கிறார். அதுக்கு கதிர் அதெல்லாம் வேணாம் என்கிறார். பின் கதிர் ராஜிகிட்ட என்ன திடீரென்று உங்க அப்பா நல்லவரா மாறிட்டாரு என்று சொல்ல, அதுக்கு ராஜி அவர் எப்பவுமே நல்லவர் தான் என்கிறார். அதனை அடுத்து கதிர் ராஜியைப் பார்த்து உங்க அப்பா திடீரென மாற என்ன காரணம் என்று கேட்கிறார்.

அதுக்கு ராஜி நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு என்கிறார். மறுநாள் காலையில ராஜியும் கதிரும் பிரக்டிஸ் பண்ண கிரவுண்ட்டுக்கு போகிறார்கள். அப்ப ராஜி உடம்பு குறையுதில்ல என்று சொல்ல, அதுக்கு கதிர் டயட் இருக்கச்சொல்லுறார். அதைக் கேட்ட ராஜி இனிமேல் நான் எப்படி கன்ரோலா இருக்கிறன் என்று பார் என்கிறார்.


மறுபக்கம் பாக்கியமும் அவரோட புருஷனும் பாண்டியன் வீட்ட சரவணன் பற்றிக் கதைக்கப் போகிறார்கள். அப்ப பாக்கியம் நம்ம பொண்ணை கழட்டி விட்டிட்டு இன்னொரு பொண்ணு கூட சுத்துவான் அவன் கிட்ட சமாதானமா எல்லாம் கதைக்கேலா என்று கோபமாக பாக்கியம் சொல்லுறார். அதுக்கு மயிலோட அப்பா இது அவளோட வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம் நிதானமா தான் முடிவெடுக்கணும் என்கிறார். 

அதனை அடுத்து பாக்கியத்தைப் பார்த்த உடனே கோமதி நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கோபமாக கேட்கிறார். பின் கதிரும் உங்களால ஒரு தடவை நடந்தது எல்லாம் போதாதா மறுபடியும் பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா என்று கேட்கிறார். அதனை அடுத்து பாண்டியன் எதுவா இருந்தாலும் ஹார்டில பேசுங்க இங்க ஒன்னும் பேசவேணாம் என்கிறார். அதைக் கேட்ட மயிலோட அப்பா சரவணன் இன்னொரு பொண்ணு கூட கதைச்சுக் கொண்டிருந்த வீடியோவைக் காட்டுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement