• Sep 22 2023

Bigg Boss-7 இல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட கிரண்... காரணம் இதுதானாம்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது. 


இந்நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 சமீபத்தில் ஆரம்பமானது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகை கிரணும் கலந்து கொண்டார். ஆனால் கிரண் முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.


மேலும் கிரண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக எந்தவொரு பர்ஃபார்மன்ஸும் செய்யாதமையினால் தான் அவருக்கு குறைவான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது கிரண் முதல் வாரத்திலேயே வெளியேற காரணம் ஒரு வார காண்ட்ராக்ட் உடன் தான் கிரண் உள்ளே சென்றிருப்பதாகவும், அதனால் தான் ஒரே வாரத்தில் வெளியேறி விட்டார் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7இலும் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement