• Sep 22 2023

மீண்டும் காட்டுக்குள் ஈஸ்வரி... தன்னைத்தானே திட்டும் கோபி.. அத்தையால் அதிர்ச்சியில் பாக்கியா... Baakiyalakshmi Promo Video..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் ஈஸ்வரிக்கு கால் பண்ணிய கோபி எங்க இருக்கீங்க அம்மா எனக் கேட்கின்றார். அதற்கு காட்டுக்குள் தான் இருக்கேன் என ஈஸ்வரி பதிலளிக்கின்றார். மறுபடியும் காடா எனக்கேட்டுக் கோபி அதிர்ச்சியடைகின்றார். பின்னர் மிருகம் கிருகம் ஏதாவது வந்திடப்போகுது எனக் கூறி கோபி பதறுகின்றார்.


பதிலுக்கு ஈஸ்வரி "அப்பிடி எதுவும் வந்தாலும் எனக்கு கவலை இல்லை, அதுதான் பாக்கியா இருக்காளே, அவளை நம்பி நான் எங்க வேணுமானாலும் போவேன் போனை வை நீ, நீயும் பதற்றப்பட்டு எங்களையும் டென்ஷன் ஆக்காதே" எனக் கூறுகின்றார். அதற்கு கோபி இது உனக்குத்தேவை என தன்னைத்தானே குத்திக் காட்டுகின்றார்.


மறுபுறம் பாக்கியாவிடம் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வரி ஆம்பளை துணை இல்லாமல் நாமளும் இப்படி அடிக்கடி போகணும் என்கிறார். அதற்கு பாக்கியா அத்தை நீங்களா இப்படிப் பேசுறீங்க எனக்கேட்டு ஷாக்காகின்றார்.


Advertisement

Advertisement

Advertisement