தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து தனது சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஏற்றி வைத்திருந்தார் விஜய். குறித்த கொடி சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு கொடியின் நடுவே வாகை மலரும் இரண்டு பக்கமும் யானைகளும் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் விஜய் கட்சி கொடியுடன் அதற்கான கொடி பாடலை உருவாக்கி விசுவல் உடன் ஒளிபரப்பி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். விஜயின் கட்சி கொடி அறிமுக விழாவில் அவருடைய பெற்றோர் வருகை தந்திருந்த நிலையில், விஜய்யின் மனைவி, பிள்ளைகள் வராததும் கேள்வியை எழுப்பியிருந்தன.
தற்போது தமிழ் சினிமாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக விஜய் திகழ்ந்து வருகின்றார். இன்னும் ஒரு படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி முற்றிலும் அரசியலில் மக்களுக்காக பயணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் விஜயின் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்ததை முன்னிட்டு வெங்கட் பிரபு அவருக்கு வாழ்த்து சொல்லியதோடு மேலும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், புகழின் உச்சத்தில் இருக்கின்றவர் சினிமாவை விட்டு அரசியலுக்குப் போவது சரித்திரத்திலேயே இல்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் மார்க்கெட் சரிந்து வயதான பிறகு தான் அரசியலுக்கு போய் உள்ளார்கள். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் அதை தருவதற்கு அத்தனை தயாரிப்பாளர்களும் ரெடியாக உள்ளார்கள். பல இயக்குனர்கள் காத்திருக்கின்றார்கள். கோடான கோடி ரசிகர்களை விட்டுவிட்டு அரசியலுக்கு போகின்றார் என்றால் அவருக்கு நிஜமாகவே மக்கள் பணி செய்ய விருப்பம் இருக்கு. அதற்கு நாம் சப்போர்ட் பண்ண வேண்டும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
Listen News!