• May 08 2024

இது தான் புதிய இந்தியா- கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதமர் மோடியைப் புகழ்ந்த நடிகர் மாதவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா மிகப் பிரமாண்டமாக ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இவ் விழாவிற்கு . மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரைப்பிரபலங்கள் ஏ.ஆர். ரகுமான், நவாஸுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர்

இதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து இயக்குநர் பா.ரஞ்சித், தமன்னா ஆகியோரும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர். கேன்ஸ் விழாவில் ஆர்.மாதவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட் திரைப்படம் நேற்று (மே 19) திரையிடப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து கேன்ஸ் விழாவில் பேசிய நடிகர் மாதவன் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார். அந்த வீடியோவை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் மாதவன் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் நுண்பொருளாதார நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒரு விவசாயிக்கும், படிக்காத ஏழை, எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றியும் ஆன்லைன் கணக்கு பற்றியும் எப்படி சொல்லித் தரப்போகிறீர்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த முயற்சி இந்தியாவுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய பேரழிவைத் தரப்போகிறது எனப் பேசப்பட்டது.

ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த கதையே மாறியது. இப்போது உலகிலேயே இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இது ஏன் நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இந்திய விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத்தர வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இது தான் புதிய இந்தியா. என கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement