மலையாள திரையுலகில் பெரும் கவனம் பெற்றுள்ள ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம், இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் , நடிகர்கள் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்தது..
இப்படத்தை துல்கர் சல்மான் தனது வெபரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில், ‘லோகா சாப்டர் 1’ படம் தொடர்பாக பிரபல நடிகர் மம்மூட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு முழு விபரமும் முழுமையாக அறிவிக்காமல், தன்னை படத்தில் ஏமாற்றி பயன்படுத்தியதாக அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் படத்தில் தனது பங்களிப்பு குறித்து எந்த தகவலும் தரப்படவில்லை என்றும், ஒரே ஒரு “நோ” என்ற குரலை மட்டும் பதிவு செய்ய கேட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் படம் வெளியானபோது, அந்த குரலும் காட்சியும் தன்னுடையதாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்ததாக கூறினார்.
‘லோகா’ படத்தில் ‘மூத்தோன்’ என்ற முக்கியமான கதாபாத்திரத்திற்கு மம்மூட்டி குரல் கொடுத்திருந்தார். அவர் நேரடியாக திரையில் தோன்றாதபோதிலும், அந்த கதாபாத்திரம் எதிர்கால பாகங்களில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் உருவாகும் என படக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!