• Apr 15 2026

சமூக வலைத்தளங்களில் பரவும் 'ஜனநாயகன்' படக் காட்சிகள்... கடும் அதிருப்தியில் படக்குழு.!

shali / 4 days ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தனது சினிமா வாழ்க்கையில் உச்சத்தை தொட்டவர். தற்போது அரசியல் களத்தில் கால் பதித்து, புதிய பாதையில் பயணிக்கிறார். இப்படியான சூழலில் அவரது ‘ஜனநாயகன்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

குறிப்பாக ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தணிக்கை சிக்கல்களால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.


தணிக்கை குழு பல காரணங்களை முன்வைத்து சான்றிதழ் வழங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்து, இது அரசியல் காரணங்களால் நடக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர். 

இதற்கிடையில், விஜய் தனது அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். “படம் பிறகு பார்க்கலாம், முதலில் மக்கள் சேவை.” என்ற நோக்கில் அவர் செயல்படுகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் முக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் பாதிக்கும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை திரையரங்கில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement