பயில்வானை காலில் கிடப்பதை கழட்டி அடிக்க நினைத்தார்களே ரொம்ப பெருமையாக இருக்கு- கடுப்பான தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்து வந்தவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருப்பதோடு தற்பொழுது பத்திரிகை ஆசிரியராகவும் வலம் வருகின்றார்.

மேலும் இவர் சமீபகாலமாக நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும் வெளிப்படையாகவும் பேசியும் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.அதிலும் முன்னணி நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேசி கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகின்றார்.

சமீபத்தில் கூட இரவில் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்த ரேகா நாயர் குறித்து இவர் பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. பின்னர் திருவான்மியூர் பீச்சில் பயில்வான் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் ரேகா நாயர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு இருக்கும் சூழலில் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து விளக்கி விட்டிருந்தனர்.

இந்நிலைகள் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளர் கே ராஜன் ரங்கநாதன் நடிகைகள் குறித்து பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அவரிடம் நேரடியாக நம் வீட்டில் பெண் பிள்ளைகள் உள்ளது அதனால் இப்படி பேசாதீர்கள் என கூறியதாகவும், அப்போது மீனாவின் கணவர் இறந்தது குறித்து மிருகத்தனமாக அவர் பேசியதால் தனக்கு கோபம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு குறித்து காவல்நிலையத்தில் தான் புகார் கூறியிருக்கிறேன், பல நடிகைகள் இவர் குறித்து விமர்சிக்க தயாராக இல்லை. ஏனென்றால் அவர்கள் குறித்தான கட்டுக்கதையையும் பயில்வான் அவிழ்த்து விட்டுவிடுவார் என பயப்படுகிறார்கள். ஆனால் ராதிகா, ரேகா நாயர் இருவரும் பெண் வீராங்கனைகள் போல பயில்வானுடன் நடுரோட்டில் சண்டையிட்டு தன் காலில் கிடப்பதை கழட்டி அடிப்பேன் என்று பேசியது வரவேற்கதக்கது என கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்