அவசர அவசரமாக டெல்லிக்கு கிளம்பிச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்- அடடே இது தான் காரணமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ன பட்டத்தோடு முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருவதோடு அணிரூத் இசையமைக்கவுள்ளார்.இப்படத்தில் வில்லனாக சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அது உறுதியாகவில்லை.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பம் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தன்படி, இந்த . இதற்காக தற்போது நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.படப்பிடிப்பு துவங்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், அங்கேயே சில நாள் தங்கி, அதன்பின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்