• Jan 19 2025

என்ட பெயர்ல பொண்ணுங்க கிட்ட தப்பா பேசுறாங்க..! அவசர வீடியோ வெளியிட்ட முத்து

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்று மாஸ் காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரையில் சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடங்களை பெற்று வந்த நிலையில், விஜய் டிவி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் முதல் 5 இடத்திற்கு வந்ததோடு மட்டுமில்லாமல் படிப்படியாக முன்னேறி தற்போது முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் முத்து கேரக்டரில் நடிப்பவர் தான் வெற்றி வசந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அதுபோல மீனா கேரக்டரில் நடிப்பவர் தான் கோமதி பிரியா. 


சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது தனது பெயரில் போலி முகநூல் ஒன்று உலா வருவதாகவும் அந்த முகநூலில் பெண்களிடம் தவறாக பேசுவது, பணம் பறிப்பது  போன்ற விடயங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் யாரும் ஏமாற வேண்டாம். என்னிடம் முகநூல் இல்லை whatsapp கூட இருக்கு ஆனால் பயன்படுத்துவது இல்லை என தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement