• Sep 07 2024

மகேஷ் பாபுவின் அழகை ரசிக்கும் ஜெனிலியா! ஒரே ஒரு போட்டோவில் இத்தனை பிரபலங்களா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என இந்த விழாவில் அதிக தென்னிந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் இத்தனை பிரபலங்களும் ஒரே  நேரத்தில் சந்திக்க முடியுமா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தற்போது குறித்த போட்டோ லைக்குகளை அள்ளி வருகிறது.


குறித்த புகைப்படத்தில் மகேஷ் பாபுவின் அருகில் அமர்ந்து போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அடுத்து நயன்தாரா அமர்ந்திருக்க, பின் வரிசையில் சூர்யா ஜோதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்கள்.


அந்த போட்டோவில் மகேஷ்பாபுவின் அழகை பார்த்து ஜெனிலியா ரசித்துக் கொண்டிருக்கும் காட்சியை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement