• Jan 22 2026

உன் போல யாருமில்லையே… ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வீடியோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட நட்சத்திரம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஒரே மனிதராக விளங்குகின்றார் ரஜினிகாந்த். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைத்தளங்கள் முழுவதும் வாழ்த்துச் செய்திகள் குவிந்து கொண்டிருக்கின்றன. 


அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களின் பிரத்தியேக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்தின் மிக நெருக்கமான நண்பரான கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஒரு சிறப்பான வீடியோவை வெளியிட்டு, ரஜினிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்ற கவிதைமிகு வரிகள் உலகெங்குமுள்ள ரஜினி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. 


“உன் போல் யாருமில்லையே… ஈரேழு உலகம் தேடியுமே… மாறாத வைரம் உன் அகமே… என் அரும் நண்பனே… ஊர் போற்றும் இன்பனே… நீ தனி நான் தனி என்றில்லை… என்றுமே நாம் அது நிரந்தரமே.”

இந்த வரிகள், கமல்–ரஜினி நட்பை மட்டுமல்ல, ரஜினிகாந்தின் மனிதநேயம், எளிமை, ஆன்மிகம் மற்றும் நேர்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே இணையம் முழுவதும் சூறாவளி போல் பரவி வருகிறது.


Advertisement

Advertisement