• Apr 21 2026

7 வருசம் வீட்டுக்கே போகல… அப்பா தண்ணி தெளிச்சு விட்டுட்டார்.! மனம் திறந்த ராம்கி

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் நிலைத்து வருபவர் நடிகர் ராம்கி. சமீபத்தில் அவர் தனது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திரையுலகில் வந்த முதல் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார். 


நடிகர் ராம்கி இந்த நேர்காணலில் குடும்ப அனுபவங்கள், தன்னுடைய படிப்பு, திரையுலகில் வெற்றியின் முதல் அடிகள் என பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ராம்கி கூறுகையில், "எங்க வீட்டில யாருக்கும் கெட்ட பழக்கம் கிடையாது. எல்லாரும் நல்லா படிச்சவங்க. எனக்கு படிப்பு வரல, அதனால நான் உறுப்பிட மாட்டேனு என் அப்பா தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு.

அப்புறம் 7 வருசமா நான் வீட்டுக்கே போகேல. 1987ல ஹீரோ வாய்ப்புக் கிடைச்சது. நான் நடிச்ச படம் செம ஹிட். எங்க அப்பா ஊர்ல அந்தப் படத்தை பார்த்திட்டு நான் தான் அப்பான்னு சொல்ல வைச்சிட்டான் என் புள்ளன்னு பெருமையா சொன்னார்." என்று தெரிவித்திருந்தார். 


நடிகர் ராம்கியின் அனுபவம், திரையுலகில் புதியவர்களுக்கு ஒரு அனுபவமாக காணப்படுகிறது. அத்துடன், ஆரம்ப காலத்தில் சிக்கல்களை எதிர்கொண்டு, பெற்றவர்களின் பெருமையை உணர்ந்து முன்னேறுவதன் முக்கியத்துவத்தை இவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement