• May 04 2024

தளபதி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபிள் சர்ப்ரைஸ்- மாஸ் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திருக்கும் இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 திரைப்படம் முடியும் முன்னரே தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகிவிட்டன. அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறியிருந்தார்.

மேலும் அடுத்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவர் பட அப்டேட்ஸ் வெளியாவது வழக்கம். அப்படி இந்தமுறை தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தளபதி 67 பட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement