• May 18 2024

மாமன்னன் திரைப்படத்தில் இணைந்த விக்ரம் பட பிரபலம்- அட இவர் சூப்பர் நடிகராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக கர்ணன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மாமன்னன் என்னும் புதிய படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகின்றார்.

அத்தோடு இப்படத்தில் இவருடன், கீர்த்தி சுரேஷ், , வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மாமன்னன் படப்பிடிப்பில் பகத் பாசில் இணைந்துள்ளார். அவரை மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு பூக்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement