• Apr 22 2025

டூப் பண்றவனுக்கு ஒரு குடும்போ இருக்குதானே நானே பண்றன்! வாங்குற காசுக்கு கஷ்டப்படத்தானே வேணும் !அஜித் கூறிய வார்த்தை

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். நிகழ்வுகள் , டிவி நிகழ்ச்சிகள் , இசை வெளியீட்டு விழாக்கள் என எதிலும் பெரிதாக கலந்து கொள்ள விரும்பாத இவர் ஒரு கார்ரேசரும் கூட. பைக்,கார் போன்றவற்றை ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர் படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளாகிய வீடியோ ஒன்று வெளியாகியது.


மகிழ்திருமேனி இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி ஆகும். குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 60 வீதம் முடிவுபெற்ற நிலையில்  படப்பிடிப்பின் போது அஜித் கார் விபத்தில் சிக்கிய காணொளியையே படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். குறித்த நிகழ்வு பற்றி விடாமுயற்சி திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் " அஜித் டூப் போட விரும்ப மாட்டார்.டூப் போடும்படி கேட்டாலும் வேண்டாம் அவனும் மனிதன் தானே அவனுக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கும், அவனுக்கேதாவது நடந்தால் அவன் குடும்பத்தை யார் பார்ப்பது, நான் வாங்கும் காசுக்கு நான் வேலை செய்யத்தானே வேண்டும். நானே செய்கிறேன். என்று கூறுவார் அஜித் மிகவும் நல்ல மனிதர் " என கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement