• Jan 18 2025

கொட்டாச்சி தன் மகளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் .. ரொம்பவும் எமோஷனலாக பேசிய மானஸ்வி!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யூத்,   பெண்ணின் மனதை தொட்டு, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற காமெடி நடிகர் தான் கொட்டாச்சி.

இவர் நடிகர் விவேக் உடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு 'வறண்ட விழிகள்' என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்ததை விட இவரது மகளான மானஸ்வி கொட்டாச்சி குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் கொட்டாச்சி மகளா என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு குறுகிய காலத்திற்குள் புகழ் பெற்றார்.

இவர் குழந்தையாய் நடிக்கும் போதே வசனங்கள் அவ்வளவு தெளிவாக பேசி தனது எதார்த்தமான நடிப்பை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருந்தார்.

அதன்படி 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார்.  அதில் அவர் பேசிய சொட்டை சொருகிடுவேன் என்ற வசனம் இப்போது மட்டும் டிரெண்டிங்காக காணப்படுகிறது.


இதைத்தொடர்ந்து தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 ஆகிய படங்களிலும் மானஸ்வி நடித்திருப்பார்.

இந்த நிலையில், தற்போது தனது மகளின் பிறந்தநாள் பரிசாக சுமார் 13 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் கொட்டாச்சி. இது பற்றி அவர் கூறுகையில்,


எனது மகளுக்கு கார் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு. வெளியே போகும் போதும்  பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும்போதும் நாமளும் சீக்கிரம் கார் வாங்கணும் அப்பா அப்படின்னு ரொம்பவும் பீலிங் பண்ணுவா. அவ ஆசைய நிறைவேற்ற தான் இவ்வளவு நாளா ஓடிக் கொண்டிருந்தேன். ஆண்டவன் அருளாள இந்த வருடம் என் மகளின் பிறந்த நாளில் அந்த கனவு நினைவாகிவிட்டது.

இது பற்றி மானஸ்வி கூறுகையில், இது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். அப்பாவும் அம்மாவும் எனக்கு பிடிச்ச பிளாக் கலர் கார் வாங்கிட்டாங்க. அவங்க எனக்கு எல்லா விதத்திலும் ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. எல்லா ஜென்மத்திலும் அவங்க தான் எனக்கு அம்மா, அப்பாவா கிடைக்கணும்  என்று நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். சீக்கிரமா கார் ஓட்டக் கத்துக்குறேன். அந்த கார்ல அம்மா, அப்பாவை கூட்டிச்செல்வன் என்று கூறியுள்ளார் மானஸ்வி.


Advertisement

Advertisement