2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி, நடிகர் சூரி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். சூரி கதாநாயகனாக அறிமுகமானதும் இந்த திரைப்படத்தில் தான்.
விடுதலை படத்தில் கிடைத்த வெற்றிக்கு பிறகு தான் சூரி கருடன், கொட்டுக்காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படங்களில் வழக்கமான காமெடி இல்லாமல் ஒரு ஆக்சன் ஹீரோவாக அவர் நடித்துள்ளார்.
விடுதலை படைத்து முதலாம் பாகம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக வெற்றிமாறன் தொடர்ச்சியாக இயக்கி வருகின்றார்.
விடுதலை இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க அவருடைய மனைவியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், விடுதலை படத்தின் மூன்றாம் பாகம் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது விடுதலைபடத்தின் இரண்டாவது பாகம் சுமார் 4 மணி நேரங்களை கடந்து செல்வதால் அதனை மீண்டும் இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ஆகையால் முழு பணிகளும் முடிந்த பிறகு விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அதைத்தொடர்ந்து மூன்றாம் பாகமும் வெளியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த விடயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!