• Sep 07 2024

திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து பாராட்டிய மிஷ்கின்! என்ன சொன்னார் தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் தான் திவ்யா துரைசாமி. அதன்பின் 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலாக பயணத்தை ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி அசத்தி வருகின்றார். இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திவ்யா, வாழை திரைப்படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் நேர்த்தியாக நடித்துள்ளார். இதனால் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், இன்னும் நிறைய படங்களில் நீ இதேபோன்று நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் இணைந்து திரைப்படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றுவோம். மாரி செல்வராஜ் உன்னுடைய கேரக்டரை அழகாக செதுக்கியுள்ளார். அன்று என்னால் மேடையில் வைத்து எல்லாரையும் தனித்தனியாக பாராட்ட முடியவில்லை அதனால் தான் என்று உன்னை நேரில் அழைத்துப் பாராட்டுகின்றேன் என்று தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் திவ்யா துரைசாமிக்கு அளித்துள்ளார்.

Advertisement

Advertisement