• Aug 02 2025

சமூக வலைத்தளங்களில் ஹீரோ… மனைவியிடம் வில்லனா? விஷ்ணு வழக்கில் ஏற்பட்ட திருப்பம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் மற்றும் காமெடி வீடியோக்கள் மூலம் செல்வாக்கு பெற்றவர் விஷ்ணு. இந்நிலையில் அவரைச் சுற்றியுள்ள திடீர் குற்றச்சாட்டு மற்றும் கைது செய்தி, சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


விஷ்ணுவின் மனைவி அஸ்மிதா, அவரை எதிர்த்து தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை புழல் காவல் நிலைய பொலீஸார் விசாரணை நடத்தியதற்குப் பிறகு, விஷ்ணுவை கைது செய்துள்ளனர்.


குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விஷ்ணுவை பொலீஸார் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன்  நீதிபதி அவரை ஜூலை 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அவரை புழல் சிறையில் அடைத்துள்ளார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களை பொலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


Advertisement

Advertisement