தமிழ் சினிமாவில் தமது எதார்த்தமான நடிப்்பினால் உச்சந் தொட்ட நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வரயா ராஜேஷ். இவர் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் தற்பொழுது ஜமுனா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் வாடகை கார் ஓட்டுநராக ஐஸ்வர்யா நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாக வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
அந்த ட்ரைலரில் ஒரு கொலை கும்பல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறது. அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் காரை பயன்படுத்தி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த ட்ரைலரில், அதிவேகமாக காரை ஓட்டி அடித்து தூக்குகிறார் ஐஸ்வர்யா,
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இப்போது வெளியாகிய ட்ரெய்லரை பலரும் கண்டு களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நாங்கள் இருவரும் ரியல் லைஃப் டாம் அண்ட் ஜெர்ரி போலத்தான் இருப்போம்- வடிவேலு குறித்து பேசிய பிரபுதேவா
- தனது சொந்தக் குரலில் முதல் முறையாக டப்பிங் பேசிய ஆண்ட்ரியா- அட இந்தப் படத்துக்குத் தானா?
- செருப்பால் அடிக்க முயன்ற மூன்றாவது மனைவி மீது புகார் கொடுத்த நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!