• Sep 20 2024

எந்த ஹீரோவும் முன்வரவில்லை.. பேசாம ஹாலிவுட் போயிருங்க அட்லி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

அட்லி இயக்கத்தில் நடிக்க எந்த பெரிய ஹீரோவும் முன் வரவில்லை என்பதை அடுத்து அவர் ஹாலிவுட் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வெற்றிக்கு ஷாருக்கான் என்ற மாஸ் நடிகர் காரணம் என்பதை மறந்து தன்னால் தான் இந்த படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததாக அட்லி நினைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தான் அவர் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் அதிகபட்ச சம்பளம் கேட்பதாகவும் இதனால் பல தயாரிப்பாளர்கள் அவரது அடுத்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பெரிய நடிகர்களும் அட்லி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன், சல்மான் கான் உள்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அட்லி அவர்கள்  நடிக்க ஒப்புக் கொள்ளாததால் அடுத்ததாக சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் சூர்யா தற்போது 44வது படத்தில் நடித்து வரும் நிலையில் இதனை அடுத்து ’வாடிவாசல்’ படத்தில் நடித்த இருப்பதால் 2026 ஆம் ஆண்டு தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து எந்த பெரிய நடிகரும் தன்னுடைய படத்தில் அடிக்க ஒப்புக்கொள்ள என்பதை அடுத்து அதிருப்தியில் இருக்கும் அட்லியிடம் அவரது  நெருக்கமான நண்பர்கள் ஹாலிவுட் ஹீரோவை படம் எடுங்கள் என்று ஆலோசனை கூறி வருவதாகவும் அது குறித்து அட்லி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement