• May 07 2024

'சந்திரமுகி-2' படம் எப்படி இருக்கிறது..? வேட்டையனாக லாரன்ஸ் கலக்கினாரா..? கவிழ்த்தாரா..? ரசிகர்களின் விமர்சனம் இதோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள திரைப்படம் 'சந்திரமுகி 2'. முன்னதாக ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை இயக்கிய பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார்.


இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்றைய தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுகுறித்துப் பாப்போம்.


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "முதல் நாள் முதல் காட்சி ஆரம்பம், சந்திரமுகி டீமுக்கு வாழ்த்துக்கள் கணபதி பாப்பா உங்களுக்கு வெற்றியையும் செழிப்பையும் வழங்கட்டும்" எனக்கூறி வாழ்த்து மழையோடு பதிவிட்டு படம் சூப்பர் என்ற வகையில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒருவர் "முதல் பாதி படம் சராசரியாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி கண்ணியமாக இருப்பதாகவும், ஒட்டுமொத்ததில் இது ஒரு சராசரி திரைப்படம் தான், திரைக்கதை ஓகே. இசை, ஃப்ளாஷ்பேக் ஓரளவு பரவாயில்லை, ராகவ லாரன்ஸ் நடிப்பில் அசத்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மற்றோருவர் "படம் அனல் பறக்கும் வண்ணம் இருக்கிறது" என நெருப்பு எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்.


வேறொருவர் "தமிழ்ல Music Directors இல்லை போல 🤦‍♂️ கொடுமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.


எனவே மொத்தத்தில் ராகவா லாரன்ஸின் நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருப்பினும், படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement