தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பல உதவி நல திட்டங்கள் மக்களுக்கு செய்யப்பட்டு வருகின்றன. இதன் தலைவரான நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியலில் களமிறங்குவதற்காக சமூகம் சார்ந்த பல பணிகளை நேரிலேயே சென்று செய்து வந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வருடம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை அதிகாரவபூர்வமாக அறிவித்து அதற்கு தலைவரானார். அதன் பின்பு கட்சி தொடர்பான அறிவிப்பு, கொடி, பாடல் என ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய விஜய் சமீபத்தில் மாநாடு ஒன்றையும் நிகழ்த்தி இருந்தார்.
இன்னொரு பக்கம் தனது 69ஆவது படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 2024 ஆம் ஆண்டின் கடைசி போட்டோவாக விஜயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பூஜா ஹெக்டே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்காக முண்டியடித்த மக்கள் சிலர் கூட்டத்தில் மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளனர்.
இதன் போது இலவச பொருட்கள் வேண்டாம் வாங்க.. என தனது குடும்பத்தினரை மார்பில் அடித்துக் கொண்டு தாயொருவர் கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஏற்கனவே விஜய் நடத்திய மாநாட்டில் பலர் மயங்கி விழுந்த சம்பவமும் கழிவு நீரை குடித்த சம்பவமும் பேசப்பட்டது. தற்போது இந்த விடயமும் வைரலாகி வருகின்றது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!