கோலிவுட்டில் பிரபல இயக்குநராக திகழும் அட்லீ, தற்போது பாலிவூட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைக்கும் படங்களாக காணப்படுகின்றன.
இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தனது மனைவி பிரியாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
பாலிவுட் சினிமாவில் உருவான பேபி ஜான் படம் அட்லீ இயக்கத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணம் முடித்த கையோடு இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று வருகின்றார்.
பேபி ஜான் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில், தற்போது அட்லி தனது மனைவி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில் கீர்த்தி சுரேஷ், பிரியா போஸ் கொடுக்க அட்லீ போட்டோ எடுக்கின்றார். ஆனால் என்னடா போட்டோ எடுக்க சொன்னா வீடியோ எடுத்து வைத்திருக்கிறார் என்று கீர்த்தி கேட்ட கேள்வி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!