• Mar 05 2024

தன்னை தானே கலாய்த்து கொண்ட வாரிசு..ஹைலைட்டாக அமைந்த காட்சி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் வம்சியின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வாரிசு. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

 செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர

எனினும் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தின் பாடல்களும், சில நாட்களுக்கு முன்பு வெளியான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரட்டிப்பானது.

இவ்வாறுஇருக்கையில்  இன்று வாரிசு திரைப்படம் திரையில் வெளியாகிவுள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையடுத்து வாரிசு படத்திற்க்கு பாசிட்டிவான விமர்சனங்களே அதிகம் வந்துள்ளன.

வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படமும் வெளியாகியுள்ளது.அத்தோடு  இரண்டு படங்களும் ரசிகர்களின் அமோகமான ஆதரவை பெற்று வருகின்றது. இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement