• Apr 20 2024

படம் பார்க்க வந்த நடிகை த்ரிஷா ரசிகர்களுக்கு சைகையில் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா...வெளியானது வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா இன்று கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளது. காரணம் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகர்களான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் படங்கள் தனித்தனியாக வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும், ஒரே நாளில் இருவரின் படங்கள் வந்தால் சொல்லவா வேண்டும், படு மாஸாக தான் உள்ளது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

அத்தோடு இரண்டு படங்களையும் அடுத்தடுத்து ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் பிரபல நடிகை த்ரிஷாவும் துணிவு மற்றும் வாரிசு படங்களை FDFSவிலேயே பார்த்துள்ளார்.



தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் த்ரிஷா படம் பார்க்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் தியேட்டரில் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வந்தபோது ரசிகர்கள் பலரும் திரும்பி கடைசி ரோவில் அமர்ந்திருக்கும் த்ரிஷாவை தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது த்ரிஷா அவர்களை பார்த்து சைகையில் 'ஸ்கிரீனை பாருங்க' என சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.  





Advertisement

Advertisement

Advertisement