தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' (Gang Leader) திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை பிரியங்கா மோகன். தனது அழகும், நடிப்புத் திறமையும் மூலம் அந்தப்படத்தில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படம் மூலம் தமிழில் இல் கதாநாயகியாக அறிமுகமானார்.
'டாக்டர்' படத்துக்குப் பிறகு, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'டான்' திரைப்படத்திலும், முன்னணி நடிகர் சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்திலும் நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகிலும் தன் இடத்தை உறுதிப்படுத்தினார். மேலும், தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
தற்போது, பிரியங்கா மோகன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிக்கும் 'They Call Him OG' படத்தில் ‘கண்மணி’ எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுஜித் இயக்குகிறார், மேலும் இப்படம் ஒரு ஆக்ஷன் பாக்கெஜ்டாக உருவாகி வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!