• Oct 03 2025

மீண்டும் இணையும் ஹிப் ஹாப் ஆதி - சுந்தர் C கூட்டணி...! வெளியான தகவல் இதோ...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

ஹிப் ஹாப் ஆதி தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும் பின்னணிப் பாடகராகவும் மட்டும் இல்லாமல் நடிகராகவும், இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்தியவர். 2017-ஆம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் ஒரே நேரத்தில் இளையரசிகர்களிடையே கலந்துரையாடலுக்கும் பிரபலத்திற்கும் காரணமாக இருந்தது.


இந்த வெற்றிக்குப் பிறகு, ஹிப் ஹாப் ஆதி பல முயற்சிகளை செய்தாலும், 'மீசைய முறுக்கு' அளவிலான வெற்றியை பெற முடியவில்லை. இதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, சுந்தர் C உடன் அவருடைய உறவு தடைபட்டதாகவும் செய்திகள் வெளியானது.

மீண்டும் ஒரே பக்கம் வந்த ஹிப் ஹாப் ஆதி மற்றும் சுந்தர் C இணைந்து 'மீசைய முறுக்கு 2' படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தத் திட்டம் தற்போது தொடக்க கட்டத்திலே உள்ளது. படத்தின் கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் 'மீசைய முறுக்கு 2', ஹிப் ஹாப் ஆதி-யின் திரும்பும் வெற்றி பயணத்திற்கு துவக்கமாக அமையுமா என்பதை காலமே பதில் கூறும்!

Advertisement

Advertisement