• Apr 03 2025

STR 50க்கு காரணம் யுவன் சங்கர் ராஜாவா...! – இயக்குநர் பகிர்ந்த உண்மை!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவின் 50வது படத்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய காரணமாக யுவன் சங்கர் ராஜா தான் இருந்தார் என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார். அதன்போது அவர் , STRன் 50வது படம் நிறுத்தப்பட்டிருந்தது ஆனால் யுவன் சங்கர் ராஜாவின் ஊக்கமும் உற்சாகமும் அந்தப் படத்தை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டது என்றார்.


இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சமீபத்திய பேட்டியில் STR 50 பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒரு நாள் எதார்த்தமாக கதையை யுவனிடம் கூறினேன். அதை கேட்டவுடன், அவர் மிகவும் பரவசமடைந்து ‘இது எப்போது ஆரம்பிக்கப் போகிறது?’ என்று என்னிடம் கேட்டார். பின்னர் சிம்புவிற்கு கால் எடுத்துக் கதைத்தார். யுவன் STR உடன் பேசியவுடன், அவர் உற்சாகம் அடைந்து அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்" என்றார்.


தமிழ் சினிமாவில் STR மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல மாஸ்டர் பீஸ் படமாக காணப்படும் என படக்குழு தெரிவிக்கின்றது. மேலும் STR 50 என்பது சிம்புவிற்கு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தப் படம் ரசிகர்கள் கொண்டாடக் கூடிய வகையில் காணப்படும் எனப் பலரும் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement