• Sep 20 2024

ஆரம்பமாகிறது சியான் 62 இன் படப்பிடிப்பு ! அடுத்தடுத்து கொண்டாட்டம் தான்..

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் உச்சத்தை கொடுத்து நடித்துக் கொண்டிருக்கையில் உச்சத்தையும் தாண்டிய அர்ப்பணிப்புடன் நடித்து திரையில் தன்னை மறைத்து பாத்திரமாகவே நிலைநிறுத்திக்கொள்ளும் நடிகர்களில் முதலானவர் நடிகர் விக்ரம்.

Thangalaan

விக்ரமின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் "தங்கலான்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மேலுமொரு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்திருக்கிறது சியான்62 படக்குழு.

Veera Dheera Sooran (Part 2) Tamil ...

வருகிற ஆகஸ்ட் 15 உலகளவில் "தங்கலான்" திரைப்படம் வெளியாகவிருக்கும் இந்நிலையில் வருகிற மாத முதல் வாரத்திலே சியான் 62, "வீர தீர சூரன் -2" படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மற்றும் தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு தளங்களுக்கான ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. 


எஸ்.யு.அருண் குமாரின் கதை மற்றும் இயக்கத்தில் வெளிவர இருக்கும் "வீர தீர சூரன் -2" படத்தில் விக்ரம் டைட்டில் ரோலில் நடிக்க  துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா என அடுத்த கட்ட நடிகர் தேர்வு அமைந்திருக்கிறது.படத்திற்கான இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் வழங்க இப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவுள்ளது. 

Advertisement

Advertisement