• May 20 2024

நயன்தாரா, சிம்ரனுடன் நடிக்க ஆசைப்பட்டு... கமல் வேலைக்கு ஆப்பு வைக்க பார்க்கும் ஜிபி முத்து... வெளியான ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.


இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில், அதில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத ஒரு போட்டியாளராக இருப்பவர் ஜிபி முத்து. இவரின் உணர்ச்சிகளும் அழுகை, சிரிப்பு என மாறி மாறித் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றது.


அந்தவகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு ரொம்பவே பிடித்த முருங்கைக்காயை அவருக்கு கொடுக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது அவருக்கு ஒரு போஸ்ட் பாக்ஸை பிக்பாஸ் வீட்டிற்குள் கமல் அனுப்பிவைத்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து உங்களுக்கு எந்த இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது? என்று கேள்வியுடன் அந்த போஸ்ட் பாக்சில் லெட்டர் ஒன்று இருக்கிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜி.பி. முத்து உடனே "நயன்தாரா, சிம்ரன்" என்று கூற என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பார்க்குறீர்களே என்று கமல் கிண்டலாக கூறுகிறார்.

அதே போல் "வீட்டிற்குள் இருக்கும் இருவரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்" என்று நம்ம ஆண்டவர் கேட்க, ஜி.பி. முத்து மௌனமாக இருக்கிறார். இவ்வாறாக இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளி வந்திருக்கின்றது.

இதோ அந்த ப்ரோமோ..


Advertisement

Advertisement