• Jun 17 2024

பார்வதியை கொளுத்த சொன்ன சாமியார்.. கதறி துடிக்கும் கண்ணம்மா – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் இரு சீரியல்கள் தான் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா.இந்த இரண்டு சீரியல்களும் இணைந்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

சாமியார் மூன்று பெண்களை ஈரத் துணியோடு நடு இரவில் ஊரைச் சுற்றி வர சொன்னதில் ஏதோ திட்டம் இருக்கிறது என சந்தேகப்படுகின்றனர். மேலும் உங்களுக்கு துணையாக வருவோம் என சரவணன் பாரதி மற்றும் பாஸ்கர் மூவரும் சொல்கின்றனர்.

ஆனால் ஊர் பொதுமக்கள் இவர்கள் மூவரும் செல்லக்கூடாது பெண்கள் மூவர் மட்டும் தான் போக வேண்டும் என சொல்லி தடுத்து நிறுத்துகின்றனர். இருப்பினும் இவர்கள் மூவரும் குறுக்கு வழியில் அவர்களை ஒரு பக்கம் தேடிச் செல்ல இந்த பக்கம் கார் வந்த ஒரு கும்பல் மூவரையும் மறித்து சண்டையிடுகிறது. ஒரு கட்டத்தில் செல்வம் சந்தியாவை தலையில் கட்டையால் அடித்து தாக்க அவர் கீழே விழுகிறார்.

அதன் பின்னர் செல்வம் கண்ணம்மா மற்றும் பார்வதி காரில் ஏற்றி கடத்திச் செல்கிறார். அதன் பிறகு சந்தியாவின் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று சரவணன் பாரதி மற்றும் பாஸ்கர் மூவரும் அனுமதித்து சாமியாரிடம் வந்து சண்டையிருக்கின்றனர்.மேலும் உங்க வீட்டு பெண்களை கடத்தியது சாமியார் இல்லை செல்வம் தான் என வீடியோ ஆதாரத்தை காட்டுகிறார்.

இதன் பிறகு இவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பி விட அதன் பிறகு சாமியார் செல்வம் இவர்களை கடத்தி வைத்து இடத்திற்கு சென்று உங்களை கடத்த திட்டம் போட்டு கொடுத்தது நான் தான் என்று சொல்கிறார். அதன் பிறகு இந்த பார்வதி பார்த்தால் உனக்கு என்ன தோணுது என சாமியார் கேட்க அப்படியே கொளுத்தனும்னு தோணுது என சொல்கிறார்.. அப்படியே பண்ணிட்டு என சொல்ல அதன் பின்னர் செல்வம் பார்வதியை ஒரு ரூமுக்கு அழைத்துச் சென்று கொளுத்துவது போல காட்டப்படுகிறது.

மேலும் இந்த பக்கம் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் கண்ணம்மாவுக்காக கதறி கதறி சௌந்தர்யா அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.

டாக்டர் அப்பா அம்மாவ எப்படியாவது கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துடுங்க என லட்சுமி அழுகிறார். மேலும் அம்மா பாசத்துக்காக ஏங்கினான் நான் இப்பதான் சமையல் அம்மாவை அம்மாவா நினைக்க ஆரம்பிச்சேன் அதனால என்னவோ அதுக்குள்ள அவங்களுக்கு இப்படி ஆயிடுச்சு என ஹேமா ஒரு பக்கம் அழுகிறாள். இத்துடன் இன்றைய ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் எபிசோட் அப்டேட் முடிவடைந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement