• Jun 26 2024

உதயநிதியின் ஆசை தான் விஷாலின் ஆசையா?- லத்தி டீஸர் வெளியீட்டில் நடந்த சம்பவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் லத்தி. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஜே. சூர்யா, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்க இயக்குநர் ஏ. வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தின் டீஸர் நேற்றைய தினம் வெளியாகியது.இவ் விழாவில் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு உதவித் தொகையை காசோலையாக வழங்கினார் நடிகர் விஷால்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் விஷாலின் கடுமையான உழைப்பை பாராட்டி பேசியிருந்தார். மேலும், நடிகர் சங்கம் கட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயர் இடம் பெற வேண்டும் என்பது தான் தனது ஆசை எனக் கூறினார்.

அதே போல நடிகர் விஷால் பேசும் போதும், நடிகர் சங்க கட்டடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று ஆசை, அந்த கனவு விரைவில் நடக்க போகிறது என்று விஷால் பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும், லத்தி படத்திற்காக தனது ரத்தம், வியர்வையை சிந்தி உழைத்தது குறித்தும் ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement