• Jun 26 2024

பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் -வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் பார்த்திபன்.இவர் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த படங்களை இயக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சினிமாவில் தனது திறமைகளை வெளிக்காட்டிய வண்ணம் உள்ளார். நடிகராக பலரது இயக்கத்தில் படங்கள் நடித்து வந்தாலும் சொந்தமாக கதை எழுதி அப்படத்தை இயக்கி நடித்தும் வருகின்றார்.

மேலும் அப்படி அவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான திரைப்படம் தான் இரவின் நிழல்.

இத்திரைப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.மேலும் இதில் பார்த்திபனை தாண்டி வரலட்சுமி, ரோபோ ஷங்கர், பிரியங்கா, பிரகடா என பலர நடித்துள்ளனர்.

விமர்சனங்கள் நன்றாக வந்தாலே அப்படத்தின் வசூலிற்கு எந்த குறையும் இருக்காது. அப்படி அண்மையில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படமும் இதுவரை ரூ. 7 கோடி வரை மொத்தமாக வசூலித்து என கூறப்படுகின்றது.

மேலும் இனி வரும் நாட்களிலும் பெரிய நடிகரின் படம் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படம் நல்ல வசூலை பெறும் என்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement