• Jul 19 2024

இரண்டாம் பாகம் தயாராகும் மரகத நாணயம் திரைப்படம்! ஏன் இவ்வளவு தாமதம்!

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் சிறிய பொருள் செலவில் , குறிப்பிட்ட சில நடிகர்களை வைத்து எடுத்திருந்தாலும் ஹிட் அடிக்கும் திரைபடங்கள் சில உள்ளது. அவ்வாறு நல்ல வெற்றிப்படமாக அடைந்த மரகத நாணயம் திரைப்படம் தொடர்பாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.


மரகத நாணயம் என்பது 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். கதை மற்றும் இயக்கம் ஏ.ஆர்.கே. சரவணன். இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடித்துள்ளார் .மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற குறித்த படத்தின் அடுத்த பாகத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.


 ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ் நடித்த மரகத நாணயம் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு. பெற்றுள்ள நிலையில்  விரைவில் மரகத நாணயம் 2 தொடங்கவுள்ளது என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. 


Advertisement

Advertisement