• Sep 22 2023

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல ரியாலிட்ரி ஷோ- அடடே இப்போ தானே ஆரம்பிச்சது- இது தான் காரணமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருவது வாடிக்கைதான். ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் தொடங்குவதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக விஜய் டிவியில் யார் அடுத்த கதாநாயகி என்ற ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் பல நடிகர்கள், பிரபலங்கள் சினிமாவில் தங்களுக்கு வாய்ப்பு குறையும் நேரத்தில் சின்னத்திரையை நோக்கி படையெடுப்பது பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பல்முக திறமையை கொண்ட கே எஸ் ரவிக்குமார் முதல் முறையாக சின்னத்திரையில் ஒரு நடுவராக களம் இறங்கியிருக்கின்றார்.


இவருடன் நடிகை ராதிகாவும் நடுவராக இருக்கின்றார்.சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களே முடிந்துள்ள இந்த நிலையில தற்பொழுது இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாவதாலேயே இந்த நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement