• Sep 26 2023

ரிலேஷன்சிப்பில் இருக்கும் போது நான் அவ கிட்ட இது தான் அதிகமாக கேட்டிருக்கிறேன்- ஓபனாகப் பேசிய நடிகர் விஷால்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

உதவி இயக்குநராக சினிமாவில் நுழைந்து இப்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரம் எடுத்தவர் விஷால்.செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகயாக அறிமுகமான விஷால் சண்டக்கோழி, அவன் இவன், துப்பறிவாளன் என வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார்.

நடிகராக கலக்கிய போதே விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரித்தும் வந்தார். கடைசியாக விஷால் நடித்த லத்தி திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றது.அடுத்து துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.


மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இந்த நிலையில் இப்படத்தை ப்ரமோஷன் செய்யும் விதமாக விஷால் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய விஷால் நான் காலேஜ் படிக்கும் போதே சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சிட்டேன். இதுக்கு பிறகு நடிகராக இருக்கும் போதும் பிடிச்சிருக்கிறேன்.


ஒரு நாளைக்கு 25 சிகரெட் எல்லாம் பிடித்திருக்கின்றேன். இப்போ சிகரெட் பழக்கத்தை விட்டு ஐந்து வருஷம் ஆச்சு என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ரிலேஷன்சிப்பில் இருக்கும் போது மாறி இன்னொரு பொண்ணு பெயரை சொல்லி கூப்பிட்டு அவளை கடுப்பாக்கியிருக்கிறேன். பின்னர் சண்டை வந்திச்சு அவளை சமாதானப்படுத்த 5 நாள் ஆச்சு. ரிலேஷன்சிப்பில் இருக்கும் போது நான் அதிகமாக சொன்னது sorry என்ற வார்த்தை தான் என்பதையும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement