தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்பு பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தனது மனைவியின் வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டு தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஜெயம் ரவியை அவருடைய மனைவி ஆர்த்தியும் ஆர்த்தியின் தாயான சுஜாதாவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள், அவருக்கான கதை, சம்பளம் என அனைத்தையுமே அவர்கள் தான் தீர்மானிக்கின்றார்கள். இதன் காரணமாக ஜெயம் ரவிக்கு கடுமையான மன உளைச்சல் காணப்பட்டுள்ளது. முக்கியமாக பாண்டியராஜ் கதையில் ரவி நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் அவருடைய மாமியார் தான். இதனால் அவர் ஆர்த்தியை விரைவில் பிரிந்து விடுவார் என்ற தகவல்கள் சில மாதங்களாகவே வலம் வந்தன.
ஆனாலும் அந்த தகவல்கள் எல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்று தான் பெரும்பாலும் எதிர்க்க பார்க்கப்பட்டது. ஆனாலும் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் அவர் தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்பு ஜெயம்ரவி எடுத்த முடிவு தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது அவரை சந்திக்கவே முடியவில்லை என புதிய சர்ச்சை கிளப்பி இருந்தார் ஆர்த்தி.
ஆனால் விவாகரத்தை அறிவிப்பதற்கு முன்னரே ஆர்த்தியிடம் பேசினோம் அவருக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அது மட்டுமின்றி தன்னுடைய பெற்றோரும் ஆர்த்தியின் பெற்றோரும் கலந்து பேசியே இந்த முடிவை எடுத்ததாக ஜெயம் ரவி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆர்த்தியிடம் இருந்து தனது பாஸ்போர்ட், கார் உள்ளிட்ட உடைமைகளை மீட்டுத் தருமாறு ஜெயம் ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ரவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்த்தியின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு விசாரித்ததாக கூறப்படுகின்றது. மேலும் ஆர்த்தி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அதே சமயம் கொஞ்சம் டல்லாக ரியாக் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன..
Listen News!