• Jan 19 2025

பாலா கையில் கிடைத்த மனு... அடுத்த 10 நாளில் தீர்ந்த பிரச்சனை... ஊரே சேர்ந்து நன்றி சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான KPY பாலா ஒன் ஸ்கிரீனில் மக்களை மகிழ்வித்தாலும் ஆப் ஸ்கிரீனில் அனைவரையும் நெகிழவைக்கிறார். தான் சம்பாத்தித்த பணத்தை ஏழைகளுக்கு என பல உதவிகள் செய்து வரும் இவர். புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கும் உதவி செய்திருந்தார். 


இந்நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியில் தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில். இந்த ஊருல இருந்து ஒரு தம்பி எனக்கு மெசேஜ் போட்டு இருந்தாரு அண்ணா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க என்று ,அப்போ நான் சரி சொல்லுங்க என்று கேட்டு இருந்தன். 


அப்போ ஒரு மனு அனுப்பி இருந்தாரு, அதுல ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து உங்களுடைய பிரச்சினையை எழுதி கையொப்பம் வைத்து அனுப்பி இருந்தாங்க, அப்போ எனக்கு தோணினது ஒன்று தான் நான் அவ்வளோ பெரிய ஆளா நம்பள நம்பி மனு அனுப்பி இருக்காங்க அவங்களுக்கு உதவி செய்யணும் என்று நினைத்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்தேன்.


உடம்ப்புக்கு நோய் என்றா தான் தண்ணி குடிக்கிறம் நாங்க குடிக்கிற தண்ணியே இங்க சுத்தம் இல்லாம இருந்தா என்ன செய்றது இது எல்லாம் யோசிச்சித்தான் கட்டாயம் செய்யணும் என்று தோணினது. இதுக்கு அப்புறம் உங்களுக்கு எந்த நோய்யும் வராது என்று ரொம்ப உருக்கமாக பேசி இருக்கிறார். இன்னும் மக்களுக்கு நிறைய செய்யணும் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

      

Advertisement

Advertisement