இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நந்திதா. இவர் இதனைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் இறுதியாக நெஞ்சம் மறப்பதில்லை என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தவிர டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் நந்திதா தனது சொந்த ஊரான பெங்களூர் நகரில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளார். இந்த புதுமனை புகுவிழாவில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார்.
சினிமா பின்னணி பாடகர் & கன்னட பிக்பாஸ் பிரபலம் ஶ்ரீ ராமச்சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கிரகப்பிரவேச புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஃபேஷன் டிசைனர் ரேஷ்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!