• Jan 18 2025

சுந்தர்.சி யோட அடுத்த பட ஹீரோ யாருனு தெரியுமா ? நீண்ட கால இடைவெளியின் பின் இணையும் கூட்டணி.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி இயக்குனர் வரிசையில் முன்னிடம் வகிக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி ,அண்மையில் இவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான "அரண்மனை 4" விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.அரண்மனை சீரிஷிலேயே இந்த படம் தனித்துவமாக பேசப்படுகிறது.


இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டிலும் சமமாகவே கவனத்தை செலுத்தும் சுந்தர் தற்போது பல ப்ராஜெக்ட்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில் தற்போது வெளியான செய்தி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sundar.C Press Meet 4: ``விஜய்-கிட்ட சொன்ன கதையை அஜித்தை வைத்துப்  பண்ணினேன்" - சுந்தர்.சி| Sundar c vikatan Press Meet fourth part - Vikatan

இயக்குனராக அடுத்த படத்தின் படப்பிடிப்பினை ஆரம்பித்துள்ள சுந்தர்.சி யின் அடுத்த படைப்பின் முன்னணி கதாபத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதாகவும் மேலும் படத்தில் நடிகை ராசி கண்ணா இணைத்திருப்பதாகவும் படிப்பிடிப்புகள் தென்காசி பக்கங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணி இணையும் படங்களின் காமெடி என்றும் எவெர்க்ரீன் காட்சிகளாக ரசிகர்கள் மனங்களில் பதிந்துள்ளது."கிரி" , "வின்னர்" , "நகரம்" என குறிப்பிட்டு சொல்லக்கூடிய வடிவேலுவின் டிரேட் மார்க் பாத்திரங்கள் அனைத்தும் சுந்தர்.சி யுடனான கூட்டணிகள்  என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தியிலிருந்து படத்தின் கதையோ பாத்திரத்தெரிவோ தெரியாத நிலையில் வடிவேலுவின் தற்போதைய நிலைப்பாட்டுடன் ஒத்துப்போக கூடிய ஓர் அழுத்தமான பாத்திரத்தேர்வு இடம்பெற்றிருக்கலாம் என நம்பலாம்.எதுவான போதும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் இணையும் இந்த கூட்டணிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாகவே காணப்படுகிறது.   


Advertisement

Advertisement