• Jan 19 2025

கோட் படத்தை பார்த்து விஜய் சொன்ன விமர்சனம் என்ன தெரியுமா? எகிறும் எதிர்பார்ப்பு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றது.

அப்பா - மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி அண்மையில் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த படத்தில் காட்டியுள்ளனர். அதேபோல புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பவதாரணியின் குரலில் சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி பலரையும் எமோஷனல் ஆக்கியிருந்தது.


இந்த நிலையில், கோட் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் முதல் பாதியை விஜய் சமீபத்தில் பார்த்ததாகவும் அதனைப் பார்த்து விட்டு 'சும்மா படம் தெறிக்குது'  என்று வெங்கட் பிரபுவிடம் உற்சாகமாக கூறியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்ததாக எச். வினோ இயக்கத்தில் தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ளார் என்றும், அது தான் அவரது கடைசி படம் என்றும்  கூறப்படுகின்றன.

Advertisement

Advertisement