• May 06 2024

பணக்காரனாக ஆசைப்பட்டு... பாதியில் பாதை மாறிய சித்தார்த்... 'டக்கர்' படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம் இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்’. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். அத்தோடு இவர்களுடன் இணைந்து யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம். 


கதையின் கரு

அந்தவகையில் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டு சென்னைக்கு கிளம்பி வருகிறார் குணசேகரன் ( சித்தார்த்). இவர் ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்தும் அங்கு அவரால் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. 

இதனால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடிவதில்லை. பின்னர் எல்லா  வேலைகளையும்  விட்டு விட்டு கடைசியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் போதைப்பொருள், ஆள் கடத்தல், ரவுடியிஸம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஒரு இடம் காட்டப்படுகிறது. 

ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த ஏரியாவுக்கு வரும் சித்தார்த் அங்கிருந்த கார் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அந்த காரில் எதிர்பாராதவிதமாக கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார். இதன் பின்னர் இவர்களின் வாழ்க்கை எப்படி இணைகிறது? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே இப்படத்தின் உடைய மீதிக் கதையாகும்.


படத்தின் கதை எப்படி? 

இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் , வில்லன் குரூப் என ஒவ்வொருவராக அறிமுகப்பத்தப்படுவதற்குள் படத்தின் முதல்பாதி முடிந்து விடுகிறது.  அது படத்தை பார்க்கும் ரசிகர்கள் மனதில் சலிப்பை உண்டாக்குகின்றது.

இந்த நிலையில் இரண்டாம் பாதியிலாவது கொஞ்சம் விறுவிறுப்பாக கதை நகரும் என்று எதிர்பார்த்தால், அப்படி எதுவும் இல்லாமல் மிக நிதானமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக். 

அதேபோல் வில்லன்களின் கூட்டத்தில் இருக்கும் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றுல் சில பாடல்கள் மட்டுமே படத்திற்கு வலு சேர்ந்துள்ளன. மற்றபடி இப்படத்தில் புதிதாக எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை. 

மேலும் பொதுவாகவே ஏழை - பணக்காரன் வேற்றுமை குறித்து நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் டக்கர் படமும் சேர்ந்துள்ளது. 

அதுமட்டுமல்லாது படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கார் ரேசிங் காட்சிகள் ரேஸியாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

தொகுப்பு 

ஆக மொத்தத்தில் டக்கர் கொஞ்சம் மக்கர் என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement