• Oct 09 2024

டீப் ஃபேக் வலையில் சிக்கிய அடுத்த நடிகை... வைரலாகும் வீடியோ பதிவு...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இப்பொது மறுபடி நடிகை கஜோலின் அவர்களுடைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.


ராஷ்மிகா மந்தனாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் களம் இறங்கினார்கள். மேலும் இது போன்ற வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை கஜோலின் மார்பிங் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், டிரெஸ்ஸிங் ரூமில் ஆடை மாற்றும் ஒரு இளம்பெண்ணின் முகத்தில் நடிகை கஜோலின் முகத்தை பொருத்தி எடிட் செய்து வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த குற்றவாளியை கண்டறிந்து அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதிரியான செயல்களினால் நிறைய பேர் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement